முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.அரசு பொறுப்பேற்றதும் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. தற்போது டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற அரசு அறிவுறுத்தி இருக்கிறது. 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ, வழங்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 21 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக் கூடாது. அதனை மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Comments are closed.