Rock Fort Times
Online News

விஜயை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறதா?* மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு இரு முறை கோரியும், ஆளுநர் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 தொகுதிகள் தேவை. ஆனால், அது தவெக-விடம் இல்லை. ஆகையால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம், தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. சட்டத்தின்படி அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும், பெரும்பான்மை இருக்கிறதோ? இல்லையா? அதை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். இந்த இழுபறியின் பின்னணியில் பாஜக இருக்கிறது. அதுவே தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கிறது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன. இந்தநிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம், சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், தமிழகத்தில் தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பது பாஜக தான் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கான உங்களின் பதில் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “இதில் எங்களது ரோல் எதுவுமே கிடையாது” என பதில் அளித்துவிட்டு, வந்தவேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்