Rock Fort Times
Online News

முதலமைச்சராக நாளை மறுநாள் (மே 7) பதவியேற்கிறார் விஜய்?…

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ள விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதனை தொடர்ந்து வருகிற 7-ந்தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு சென்னையிலேயே தங்கி இருக்குமாறு த.வெ.க. தலைமை அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்