Rock Fort Times
Online News

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு…!

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இன்று(ஏப்.29) மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் முன் எப்போதும் இல்லாத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிகப்படியான வாக்குகள் பதிவானதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று என்டிடிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக 125-145, அதிமுக 65-80, தவெக 18-24 இடங்களை கைப்பற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வருமாறு:-

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்