Rock Fort Times
Online News

தேனியில் துயர சம்பவம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு…!

தேனி மாவட்டம், கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, பட்டாக தயாரிக்கும் மருந்துகள் இருப்பு வைக்கும் வைப்பறையாக இந்த ஆலை செயல்பட்டு வந்தது. தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று(25-04-2026) காலை தொழிலாளர்கள் ஆலைக்கு வந்து திறந்த போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் தொழிலாளர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்