குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார்..!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டார் கோட்டை ஆகிய பகுதிகளில் குதிரை வண்டியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் .

Comments are closed.