தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடர்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.
அந்தவகையில் வாக்காளர் அடையாள அட்டை பழையதாகவும், மோசமாகவும் இருந்தால் புதிய வாக்காளர் அட்டையை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இ- வாக்காளர் அட்டையை எளிதாக ஆன்லைனிலையே டவுன்லோடு செய்யலாம். இதற்கு வாக்காளர்கள், voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவேண்டும். பின் மொபைலுக்கு வரும் ஓடிபி-ஐ பதிவிட்டால் புதிய டிஜிட்டல் கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.