Rock Fort Times
Online News

திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்: திமுக அரசை குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி..!

திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.13) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி இருந்தபோதே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சி குறித்து பொய்யான தகவல்களை கூறுவதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்து மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில்தான் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயத் துறை திமுக ஆட்சியில் 5.5% லிருந்து 3.5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொழிற்சாலைகள் குறித்த கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்காமல் வெள்ளைத் தாளை காட்டுவதாகவும், திமுக அரசு எந்த சாதனையும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார். திருச்சியை அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்