“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும்” எனத் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத் தொகையை மறு பரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத் தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத் தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதான் என்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா ?” என்று முதல்வர் சவால் விடுத்துள்ளார்.

Comments are closed.