Rock Fort Times
Online News

தேர்தல் பரப்புரையின் போது திடீரென மயக்கம்: ராமதாஸிடம் நலம் விசாரித்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருளை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (ஏப்.12) பரப்புரை மேற்கொண்டார். அப்போது ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிகப்படியாக வெயிலின் தாக்கம் காரணமாக ராமதாஸ் மயங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸிடம், தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ராமதாஸ் நலமுடன் உள்ளார். 2 நாட்கள் ஓய்வுக்கு பின்பு மீண்டும் பரப்புரைக்கு போகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்