Rock Fort Times
Online News

ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆகவே, இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருந்தாலும் நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்