Rock Fort Times
Online News

மணப்பாறை வேட்பாளர் அப்துல் சமதுவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ், ஜோதிமணி எம்.பி. வாக்கு சேகரிப்பு…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி (மனிதநேய மக்கள் கட்சி) வேட்பாளர் அப்துல் சமதுவை ஆதரித்து மருங்காபுரி வடக்கு ஒன்றியம், ஊத்துக்குளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திராவிட மாடல் அரசு மீண்டும் மலர்ந்திட, திட்டங்கள் தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்களுடன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், இந்த தேர்தல் முதல்வர் சொன்னதுபோல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான தேர்தல். இதுபோன்று போட்டி வரும் போதெல்லாம் தமிழ்நாடு அணிதான் வென்றிருக்கிறது, அதேபோல, இந்த முறையும் தமிழ்நாடு அணிதான் வெல்லும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்