Rock Fort Times
Online News

லால்குடி சட்டமன்ற தொகுதியில் வியாபாரியாக மாறி வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்…! (வீடியோ இணைப்பு)

அதிமுக, திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள மன்சூர் அலிகான் திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் தனித்து போட்டியிடுகிறார். லால்குடி தொகுதிக்கு வந்த அவர் அங்குள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் லால்குடி அருகே கல்லக்குடி சந்தைக்கு வாக்கு சேகரிக்க சென்ற அவர் திடீரென வியாபாரியாக மாறி ஒரு பெண் கொண்டு வந்த காய்கறிகளை எடை போட்டு விற்கத் தொடங்கினார். அவரிடம் சிலர் காய்கறிகளை வாங்கினர்.

பின்னர் சந்தையில் உள்ள ஒரு வாலிபரிடம் காய்கறிகள் வாங்கி அதற்குரிய பணத்தை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வியாபாரிகளிடமும், அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடமும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மன்சூர்அலிகானுடன் சிலர் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்