Rock Fort Times
Online News

த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு தாக்கல்…! 

தமிழக வெற்றிக் கழக தலைவர்  விஜய்,  வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்தார். சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் பெரம்பூர்  தொகுதியில் போட்டியிடும் அவர் இன்று (மார்ச் 30) வேட்புமனுவை தாக்கல் செய்தார். வியாசர்பாடியில் அமைந்துள்ள அம்பேத்கர்  காலேஜ்  வளாகத்தில் செயல்படும் பெரம்பூர் தேர்தல் அலுவலகத்தில் அவர்  வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

செங்கோட்டையன்:

த.வெ.க. சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடுகிறார். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செங்கோட்டையன் திறந்தவேனில் நின்றபடி தொண்டர்கள் புடைசூழ சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஆதவ் அர்ஜுனா:

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சிட்கோ நகர் சமுதாய கூடத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்