Rock Fort Times
Online News

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர். இந்தத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் 8 நாட்களுக்கு கொடுக்கப்படிருந்தாலும், இதில் விடுமுறை நாட்களை தவிர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அதன்படி, மார்ச் 30, ஏப்ரல் 1, 2, 6 ஆகிய நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்