Rock Fort Times
Online News

பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் பரபரப்பு புகார்…!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம்
நாளை(மார்ச் 29) வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கிறது. அதற்கு முன்னதாக சென்னை, பெரம்பூரில் இருந்து விஜய் பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. த.வெ.க.கட்சியினர் அனுமதி கேட்டு உள்ள இடத்தில் 200-ல் இருந்து 300 பேர் மட்டுமே நிற்க முடியும் 3000 பேர் நிற்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா, த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் 3 ஆயிரம் பேர் நிற்க போதிய இடவசதி இல்லை. கூட்டம் கூடினால் நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரசாரத்துக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக விஜய் சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அதிகாரிகள் சிலர், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அவருடன் கட்சி நிர்வாகிகள் செங்கோட்டையன், நிர்மல்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்