மும்பை பாஜகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் சமீபத்தில் நடைபெற்றது. பாஜக மும்பை தெற்குப் பிரிவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மும்பையில் வாழும் தொழிலதிபர் முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மும்பை பாஜக தலைவர் அமித் சதாமால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவர், அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஆஷிஷ் ஷேலார் மற்றும் மும்பை தலைவர் அமித் சதாம் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இவர் நீண்ட காலமாக மும்பையில் வசிக்கும் தமிழர்களுக்காகவும், அங்குள்ள பாஜகவின் வளர்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். குறிப்பாக மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளுக்கும், பாஜக தலைமைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், மும்பை பாஜகவின் முக்கியத் தலைவருமான ஆஷிஷ் ஷேலார் மற்றும் மும்பை பாஜக தலைவர் அமித் சதாம் ஆகியோருடன் நெருக்கமான அரசியல் தொடர்பில் இருப்பவர். இவர், புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர். மும்பை பாஜக எம்எல்ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன் இவருக்கு அண்ணன் முறை ஆவார்.

Comments are closed.