உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று( மார்ச் 21) காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார். உயர்வகையைச் சேர்ந்த அபூர்வமான காரம்பசு மாட்டை எம்.எல்.ஏ பழனியாண்டி இன்று காலை கோயிலுக்கு நேரில் கொண்டு வந்தார். பின்னர், கோயிலின் அர்ச்சகர்கள் முன்னிலையில், அந்தப் பசுவிற்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பூஜைகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, பசுமாட்டினை கோயில் அதிகாரிகளிடம் அவர் முறைப்படி ஒப்படைத்தார். அப்போது கழக நிர்வாகிகள், உறவினர்கள், கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.