தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுகவை முன்னாள் அமைச்சர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பர்? இன்று கிறுக்கு பிடித்தாற்போல அங்குமிங்கும் அலைகிறார் பழனிசாமி. விஜய் வீட்டின் கதவைத் தட்டினார். ஆனால், அவர்முடியாது என்று கூறி விட்டார். இந்த இயக்கத்தை உதயகுமார் கடப்பாரையுடனும், பழனிசாமி மண்வெட்டியுடனும் வந்து, குழிதோண்டி புதைத்து விட்டனர்” என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில், விஜய்யுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க முற்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.