திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா (வயது 40). இவர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் நித்யா வந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளியதில் நிலை தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதையடுத்து உடனே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் நித்தியா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, தாலிச் சங்கிலி பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
,……..

Comments are closed, but trackbacks and pingbacks are open.