Rock Fort Times
Online News

அரசு மருத்துவமனைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

இஸ்ரேல்- ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும், சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், சென்னையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- சிலிண்டர் தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் எந்த பிரச்சினையும் தற்போது வரை இல்லை. அடுத்த வாரத்துக்குள் நிலைமை சரியாகாவிட்டால் விறகு அடுப்பு, எலக்ட்ரிக் அடுப்புகள் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்