கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். மேலும், த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர். இந்தநிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை(மார்ச் 10) ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜய்க்கு நெருக்கடி கொடுத்து அவரை அதிமுக- பாஜக கூட்டணியில் இணைய வைக்கும் முயற்சியாகவே இது அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் அந்த தேதியில் பங்கேற்க இயலாது என்றும், அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சிபிஐ குறிப்பிடும் தேதியில் ஆஜராக இருப்பதாகவும், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க கோரியும் விஜய் தரப்பில் சிபிஐக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சிபிஐ ஏற்குமா?, நாளை விஜய் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Comments are closed.