Rock Fort Times
Online News

தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! அமைச்சர் கே.என். நேரு, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு!

திருச்சியில் திமுக 12வது மாநில மாநாடு இன்று( மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவருக்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  வே.சரவணன், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், மெய்யநாதன், பெரிய கருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா, திருச்சி சிவா, கே.என்.அருண் நேரு, ஜெகத்ரட்சகன், கவிஞர் சல்மா, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஓ.பி.எஸ்.ரவிந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்