Rock Fort Times
Online News

ஹெவன் ஆட்டோமேஷன் நிறுவனம் திருச்சி தில்லைநகரில் உதயமானது!* விக்னேஷ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் வி.கோபிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..!

மின் விசிறி சுவிட்ச்சை ஆன் செய்வதில் தொடங்கி வீடு மற்றும் அலுவலக கதவுகளை கன்ட்ரோல் செய்வது வரை அனைத்தையும் உங்களது மொபைல் போனிலேயே ஆப்பரேட் செய்துவிட முடியும். அப்படிப்பட்ட ஹோம் ஆட்டோமேஷன் வேலைகளை சிறப்பாக செய்துதர ஆரம்பிக்கப்பட்டுள்ளதுதான் ஹெவன் ஆட்டோமேஷன் நிறுவனம். திருச்சி தில்லைநகர் 7வது கிராஸில் இன்று ( பிப்.28 ) கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இப்புதிய நிறுவனத்தை விக்னேஷ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் இன்ஜினியர் வி.கோபிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஹெவன் ஆட்டோமேஷன் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மேலும் இவ்விழாவில் ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆனந்த், சாமி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.இளமுருகன், மனோ ஹவுசிங் புரமோட்டர்ஸ் ஆர்.மனோகரன், மொராய்ஸ் குரூப் நிறுவனர் ஜே.எஸ். லெரோய்ன் மொராய்ஸ், ஆதித்யா கன்ஸ்ட்ரக்சன்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஆர்.எஸ்.ரவி, டைஆர்ச் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனர் டி.அண்ணாமலை, எஸ்.எஸ் அசோசியேட்ஸ் எஸ்.சுப்பிரமணியன், பிரபல ஆர்க்கிடெக்ட் பி.ஜனார்த்தனன் மற்றும் பல்வேறு தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹெவன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்