Rock Fort Times
Online News

அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது – த.வெ.க.வினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்…!

தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமுக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும். விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்