Rock Fort Times
Online News

யாருடன் கூட்டணி: பிப்.28ம் தேதி முக்கிய அறிவிப்பு- டாக்டர் ராமதாஸ்…!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு ஆர்வம் காட்டினாலும் அங்கு ஏற்கனவே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாமக உள்ளே வந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விசிக கூறி வருகிறது. இதனால் அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலில் தனது பலத்தை நிரூபிக்க டாக்டர் ராமதாஸ் இன்றைய தினம்(பிப்.26) திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்தும், கூட்டணி வைப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். பிப்.28க்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்