Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினர்…!

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி” என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து கட்சி நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட்பிரபு ஏற்பாட்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட 47-வது வார்டு பகுதிகளில் வீடு, வீடாக சென்று கட்சி நிர்வாகிகள் ஆதரவு திரட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்