பெண் எம்.பி.க்களின் வீடியோக்களை தொடர்ந்து வெளியிடும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ராஜினாமா செய்ய வேண்டும்…* காங். எம்பி வலியுறுத்தல்!
மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறைக்குள் சென்று வாக்குவாதம் செய்தது ஆகிய வீடியோக்களை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி கூறுகையில், “கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்திற்கு புறம்பான பணிகளைச் செய்து வருகிறார். இதற்காக அவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்ற வரலாற்றில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஒருவர் இதுபோன்று செய்ததை நான் பார்த்ததில்லை. எம்.பி.க்கள் சார்ந்த வீடியோக்களை தனிப்பட்ட முறையில் வெளியிடுவதை நான் பார்ப்பது இதுவே முதல்முறை. அவர் மற்ற வீடியோக்களையும் வெளியிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘எடிட்’ செய்யப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு மக்களை அவமதிக்கும் இந்த செயலை என்னவென்று சொல்வது?. அவர்களுக்கு காங்கிரஸின் வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்பது, மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த கோழைகள் பதில்களை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.