திருச்சி ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த குத்தாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (பிப்.13) வெள்ளிக்கிழமை மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்தில் நிறுத்தப்படும். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் 13, 16, 18 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

Comments are closed.