Rock Fort Times
Online News

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மகா சிவராத்திரி தினமான 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம். மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 12ம் தேதி (வியாழக்கிழமை) 125 பேருந்துகளும், 13-ந் தேதி வெள்ளிக்கிழமை 500 பேருந்துகளும், 14-ந் தேதி சனிக்கிழமை 505 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13-ந் தேதி வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், 14-ந்தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர். ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாதவரத்தில் இருந்து 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகளும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்