அனைத்து ரேஷன் கடைகளிலும் Google Pay மற்றும் Paytm மூலம் பணம் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரேசன் கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்துவிட்டு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே, பணம் செலுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் Google Pay, Phone pay மற்றும் Paytm மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. மே மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த UPI வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரேஷன் கடைகளிலும் UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.