Rock Fort Times
Online News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரத்ததான முகாம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தவுடன் ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். முகாமில், திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், மூத்த நிர்வாகி வண்ணை அரங்கநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்