Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அவசர வழி கதவை திறந்த மருத்துவரிடம் 2 மணி நேரம் விசாரணை…!

திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று (அக்.9) பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும்n விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர். அந்த விமானத்தில் பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவர் ஒருவர் விமானத்தின் உள்ளே வந்து அமர்ந்த பொழுது அவசர வழி கதவை திறந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த விமானத்தில் இருந்த பணியாளர்கள் அவரை விமானத்திலிருந்து இறக்கி விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தி விளக்க கடிதம் பெற்ற பிறகு காவல் நிலையத்தில் இருந்து மருத்துவர் அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்