Rock Fort Times
Online News

மது ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது: மது பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்…! (வீடியோ இணைப்பு)

மது பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சென்னை- சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அரூர், என்.ஆர்.வி. மஹால் அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது, இதில், லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்ததில் சாலையில் மது பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டில் சிதறிய மது பாட்டில்களை மது பிரியர்கள் ஓடி வந்து போட்டி போட்டு அள்ளிச்சென்றனர்.

அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு மது பாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிரேன் உதவியுடன் அங்கிருந்து லாரியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்