Rock Fort Times
Online News

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி – மண்ணச்சநல்லூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மண்ணச்சநல்லூர் வட்டாரக்கிளை தேர்தல் நொச்சியத்தில் நடைபெற்றது. இதில் 100% பெண் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக க.பேபி ராணி, செயலாளராக செ.ரெ.மணிபாரதி, பொருளாளராக பொ.ராஜராஜேஸ்வரி, துணைத் தலைவர்களாக பி.கலைமதி, ப.மனோகரி, பி.அமுதா, துணைச் செயலாளர்களாக பி.மேரி கிளாரா, கி.ச.கீதா குமாரி, எஸ்.மகேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக இரா.மேரி ஜோஸ்பின், இரா.அசம்ஷியா, அருட்செல்வி, வீ.பாக்கியம், ரா.தனலெட்சுமி, அ.அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக 22 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பின்னர் நடந்த பாராட்டு கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் நீலகண்டன் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அகவிலைப்படியை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில் தேர்தல் ஆணையராக ம.சேவியர் பால்ராஜ், துணை ஆணையராக அ.பெர்ஜித் ராஜன் ஆகியோா் பணியாற்றினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்