Rock Fort Times
Online News

தமிழகத்தில் நெஞ்சை பிளக்கும் சம்பவம்: கரூரில் நடைபெற்ற விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 30 பேர் பலி?…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் வீதம் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமைகளில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பரப்பரை மேற்கொண்ட அவர் இன்று நாமக்கல் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதியம் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்த அவர் கரூர் மாவட்டத்திற்கு இரவு 7 மணி அளவில் வந்து பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவரது பேச்சைக் கேட்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களைத் தொண்டர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைந்தார். மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரூர் நிலவரம் குறித்து கலெக்டர் தங்கவேலுவிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்