Rock Fort Times
Online News

நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு,12 பேர் கவலைக்கிடம்!* நாளை காலை கரூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கரூர் மாவட்டத்தில் இன்று(27-09-2025) தேர்தல் பரப்பரை மேற்கொண்ட நடிகர் விஜயை காண தொண்டர்களும், பொதுமக்களும் பெண்களும் பெருமளவில் திரண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை தொண்டர்கள் மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்தனர்.12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க ஸ்டாலின் பெரும் துயரம் அடைந்தார். அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைத்துள்ளார். திருச்சி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களை உடனடியாக கரூருக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில் அவர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் நாளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்