நடைப்பயிற்சிக்கு வெளியே செல்ல முடியவில்லையே என வருத்தமா ?* வீட்டிலேயே இந்த ‘நாற்காலி’ முறையை பின்பற்றலாமே…! (வீடியோ இணைப்பு)
காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. காலை நேரத்தில் முடியாதவர்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். வேலைப்பளு மற்றும் வயது மூப்பு காரணமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வளிக்கும் வகையில் ஒரு எளிய முறையை பிரபல டாக்டர் சத்தியநாராயணா எம்.டி. விளக்கி உள்ளார். இவர் புகழ்பெற்ற எலும்பியல் மருத்துவர். திருச்சிராப்பள்ளி, பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)-ல் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை மருத்துவ அதிகாரி. இவர், மாற்று நடைப்பயிற்சி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளதோடு எளிய குறிப்புகளையும் தந்துள்ளார். இப்போது அவருக்கு 80 வயது இருக்கலாம், ஆனால் அவரைப் பார்த்தால் அவ்வளவு வயதானவராகத் தெரியவில்லை. இதற்கு உடற்பயிற்சியே காரணம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் டாக்டர் சத்திய நாராயணாவுக்கு பாராட்டும் , நன்றியும் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் இந்த நாற்காலி நடை பயிற்சியை முயற்சித்து தான் பாருங்களேன்.
நன்றி! டாக்டர் சத்திய நாராயணா சார்.

Comments are closed.