திருச்சி மேற்கு தொகுதி, பாரதி நகரில் புதிய நியாய விலைக் கடை… திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 29 வது வார்டு, பாரதி நகர் பகுதியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலைக் கடை திறப்பு விழா இன்று( அக்டோபர் 14) நடைபெற்றது. நியாய விலை கடையை திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.என்.நேரு திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
இக்கடையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றியும், தரமாகவும் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதே நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.