அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அக்கட்சியின் மாநில பொருளாளருமான, முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், அக்கட்சியிலிருந்து விலகி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக்கொண்டார். டிடிவி. தினகரனின் வலதுகரமாக செயல்பட்ட ஆர்.மனோகரனே, அஇஅதிமுகவில் இணைந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

