கோவையில் உக்கடம், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிமக்கள் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பூ மார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக மத நல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடினர். ரமலான் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு இந்து மடாதிபதி, கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாமிய இமாம் என மும்மதத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள், அமைப்பை சார்ந்தவர்கள் பூ , குளிர்பானம் தந்து, இனிப்பு ,பலகாரம் உபசரித்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளை மத நல்லிணக்க பண்டிகைகளாக மூன்று மத பிரதிநிதிகளுடன் கொண்டாடும் நிலையிலே, இந்த வருடமும் மத நல்லிணக்க ரம்ஜான் கொண்டாடியதாக விழா ஏற்பாட்டாளரான பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரான ஹாஜி. ஜெ. முகமது ரஃபிக் தெரிவித்துள்ளாா். சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாக, மத நல்லிணக்கம் பேணி அமைதி நிலை ஏற்பட்டு, மக்கள் எல்லா வளமும் நலமும் பெற பிராத்திப்பதாகவும் , மத நல்லிணக்க ரமலான் கொண்டாடுவதாகவும் தெரிவித்தனர். இது போன்ற மத நல்லிணக்க பண்டிகையை கொண்டாடுவதாகவும், கடந்த 15 வருடங்களாக இவ்வாறான நிகழ்வுகள் செய்வதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

