திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மருவத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராணி(54) கணவர் இறந்து விட்டார். கூலி வேலை செய்து வரும் ராணி தனது பேரக்குழந்தைகளான தனுஸ்ரீ-11, நதியா9, வர்ஷிகா9, கவிஷ்னா5 ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இவரது வீட்டின் மேற்கூரை திடீரென கீழே சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக மின்சாரம் தடைபட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை .இதனை அடுத்து துறையூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர் .மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

