சட்டசபையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அதில் முதல்வர் மு .க. ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார் .அதன்படி ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு ரூபாய் 485.51 இலட்சம் செலவினத்தில் உள்கட்டமைப்பு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று கட்டப்படும். திருவெறும்பூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் நிறுவப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பூர், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஆகிய நான்கு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தலா ரூபாய் 181.32 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூபாய் 725.28 இலட்சம் செலவினத்தில் நிறுவப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
