Rock Fort Times
Online News

கார் பட்டறையில் திடீர் தீ விபத்து !

திருச்சி பழைய பால் பண்ணை அருகே பயன்படுத்த முடியாத பழைய கார்களை உடைத்து உதிரி பாகங்களை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் பட்டறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கார் உட்பட பல்வேறு கார் உதிரி பாகங்கள் எரிந்து  சாம்பலாகின. திருச்சி   பழைய பால் பண்ணை அருகே ஜாஃபர் என்பவர்   பழைய காரை உடைத்தெடுத்து அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் பட்டறையை நடத்திவருகிறாா். இன்று வழக்கம்போல் பணியாளர்கள் காரை உடைத்து உதிரி பாகங்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேஸ் கசிந்து எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் கார் உதிரி பாகங்கள் கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். ஆயினும் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் உதிாி பாகங்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்