Rock Fort Times
Online News

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவைத்தொடர்ந்து, முக்கிய விழாவான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும், கள்ளழகருக்கு எதிர் சேவை மே 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.15 க்குள் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் பகுதியில் செய்யப்பட உள்ள தூய்மைப்பணிகள், முன்னேற்பாட்டு பணிகள், பந்தல் அமைத்தல், மணல் திட்டு ஏற்படுத்துதல், தண்ணீர் நிரப்புதல், கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை கள்ளழகர் கோவில் நிர்வாகத்தினர் இன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கள்ளழகர் கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் நிலையத்துறை  கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்