Rock Fort Times
Online News

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…!

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான அருண் நேரு, திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ராமஜெயம் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல கோவையில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அடையாறு காந்திநகரில் டிவிஹெச் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்