திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்… * மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது!
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸின் 89வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஆர். மாலதி, முத்துமீனா, அனு ஷ்ருதி, முகமது சுகைல், பரம்வீர், டார்வின் முத்து, சுப்ரமணி மற்றும் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை பி. சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், துணை தலைவர்கள் வரகனேரி சசிகுமார், பிரபு, இணை செயலாளர் விஜய், நாகராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சபரிமுத்து, ஜெயராமன், இரண்டாவது கூடுதல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எழிலரசி, செயற்குழு உறுப்பினர்கள் புவனேஷ்வரி, பிரியா, கௌசல்யா, ரத்தனகிரி, முனீஸ்வரன், மீனா, பாலாஜி, ரங்கீலா, கனிமொழி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.