Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.99 லட்சம் வருமானம்!

தங்கம் ,வெள்ளி, வெளிநாட்டு பணமும் கிடைத்தது!

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்வார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.99 லட்சத்து 31 ஆயிரத்து 723-ம், 1 கிலோ 772 கிராம் தங்கமும், 3 கிலோ 873 கிராம் வெள்ளியும், வெளி நாட்டு பணம் 230 மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 344-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்களும் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்