திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் மாதவி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கதுரை. இவரது மனைவி கவிதா வயது 42. இவரது மூத்த சகோதரியின் மகள் சசிகலா (23). இவர் திருச்சியில் கவிதா வீட்டில் தங்கி இருந்து இங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த கவிதாவின் சகோதரர் கணேசனின் மகன் கார்த்திக் (25 ). உறவு பெண்ணான சசிகலாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை சசிகலா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் கரூரிலிருந்து திருச்சி புறப்பட்டு அத்தை கவிதா வீட்டுக்கு சென்றார். அங்கு கவிதா அவரது மூத்த சகோதரி மற்றும் அவரது மகள் சசிகலா ஆகியோர் இருந்தனர். அப்போது கவிதாவிடம் சென்று என் காதலுக்கு நீங்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் தடுக்கிறீர்கள் என கூறி மரக்கட்டையால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து கவிதா ஏர்போர்ட் போலீசீல் புகார் அளித்ததின் பேரில் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.