மகாத்மா காந்தி நினைவு தினம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு…!
மகாத்மா காந்தி 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையிலும், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிலை முன்பு நின்று தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் விக்னேஷ், அப்துல்சலாம், சுவாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் கோட்டத் தலைவர் சந்துக்கடை சம்சுதீன், குமாஸ்தா அண்ணாசிலை விக்டர், மார்க்கெட் மாரியப்பன், கலை பிரிவு சண்முகம், கோட்ட துணைத் தலைவர் யாசர் அ ராபத், மலைக்கோட்டை சேகர், சிந்தாமணி ஆட்டோ பாலு, ஹசன் முஸ்தபா, பீர்முகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.